சாலையோரம் கட்டட கழிவு அகற்ற வேண்டுகோள்
கோயம்பேடுகோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு 127வது வார்டில் அய்யப்பா நகர் உள்ளது. இதன் இரண்டாவது தெருவில், சாலையோரம் கட்டட கழிவுகள், குப்பை, பழைய பொருட்கள் உள்ளிட்டவை குவிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டட கழிவுகளில் இருந்து பறக்கும் துாசி, அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகிறது.
மேலும், மழைக்காலத்தில் இந்த குப்பையில் இருந்து சேறும் சகதியும் சாலையில் தேங்கி விடுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள கட்டடக் கழிவை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.