தண்டலம் கூட்டுச்சாலையில் மேம்பாலம் அவசியம்
ஸ்ரீபெரும்புதுார் அருகே, சென்னை- —- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், பேரம்பாக்கம்-தண்டலம் நெடுஞ்சாலையும் இணையும் தண்டலம் கூட்டுசாலை சந்திப்பு உள்ளது.
இருங்காட்டுக்கோட்டையை சுற்றி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், இந்த இரு சாலை வழிகளிலும் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.
இங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, போலீசார் மற்றும் சிக்னல் இல்லை. இதனால், நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சென்னை — பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
நெரிசல் மற்றும் விபத்தை தடுக்க மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், சந்தவேலுார் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதே போல், தண்டலம் கூட்டுசாலையில் மேம்பாலம் அவசியம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.