‘காசநோய் இல்லா சென்னை’ அரும்பாக்கத்தில் விழிப்புணர்வு
‘தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின், ‘காசநோய் இல்லா சென்னை’ என்ற தலைப்பில், சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியின், அண்ணா நகர் மண்டலம் சார்பில், அரும்பாக்கத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்வில், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் இணைந்து, உறுதிமொழி ஏற்று, எம்.எம்.டி.ஏ., காலனியில் மனித சங்கிலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின், சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரணியாக நடந்து சென்று, காசநோய் தொடர்பான துண்டு பிரசுரத்தை வழங்கினர்.
காசநோய் பரவும் விதம், நோயின் அறிகுறிகள், ஊட்டச்சத்து உதவித்தொகை, சிகிச்கை தொடர்பான விபரங்களை பொதுமக்களுக்கு விளக்கினர்.