காசிமேட்டில் வரத்து குறைவால் மீன் விலை இரு மடங்கு உயர்வு
காசிமேடு:காசிமேட்டில், வரத்து குறைந்ததால், மீன் வகைகளின் விலை இருமடங்கு உயர்ந்தது.
ஞாயிறுதோறும் மீன் வாங்க குவியும் மக்களால், காசிமேடு மீன்பிடி துறைமுகம் திருவிழா கூட்டம் போல் காட்சியளிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் இருந்தும், மீன் வாங்க அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதும்.
நேற்று அதிகாலை முதலே, சென்னை காசிமேடு துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஆந்திரா மீனவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதால், குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றன. நேற்று, 15க்கும் குறைவான விசைப் படகுகள் மட்டுமே கரை திரும்பின.
இந்த வாரம் சங்கரா, கானங்கத்தா, இறால் உள்ளிட்டவை வரத்து அதிகம் இருந்தது. மீன் வரத்தும் குறைவால் மீன் விலை உயர்ந்திருந்தது. இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ ரூபாயில்
வஞ்சிரம் 1,000 – 1,200
வெள்ளை வவ்வால் 1,300
கறுப்பு வவ்வால் 1,000
சின்ன பாறை 400
சங்கரா 400 – 500
சீலா 500 – 600
நெத்திலி 300 – 400
வாலை 150- 200
கனாகத்த 200 – 250
நண்டு 150 – 200
இறால் 400
டைகர் இறால் 1,000