சுங்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மாற்றம்
சென்னை:சென்னை விமான நிலையத்தில் இருந்து, சுங்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர், திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை கண்காணிப்பாளர் பணியில் இருந்த பராமனந்த் ஜா, சரவணன் ஆதித்யன், சுனில் தேவ் சிங், டல்ஜீட் சிங் ஆகியோர் அதிரடியாக அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளனர். சுங்கத்துறை தலைமை அலுவலகம் திரும்ப, அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து, தங்கம், ஐபோன்கள் கடத்தி வந்த, 13 கடத்தல் குருவிகளிடம், சோதனை நடத்தாமல் வெளியில் அனுப்பிய குற்றச்சாட்டு அடிப்படையில், அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுங்கத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.