சாலையில் கிடந்த தங்க செயின் துாய்மை பணியாளர் ஒப்படைப்பு
கே.கே., நகர், கோடம்பாக்கம மண்டலம், கே.கே., நகர் 137 வது வார்டில், ஒப்பந்த துாய்மை பணியாளராக பணி செய்து வருபவர், இருதயமேரி, 49.
இவர் நேற்று முன்தினம் இரவு, கே.கே., நகர் அண்ணா பிரதான சாலையில், சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சாலையோரம் தங்க செயின் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து, அந்த தங்க செயினை, உயர் அதிகாரிகளிடம் இருதயமேரி ஒப்படைத்தார். அதன்பின், கே.கே., நகர் போலீசாரிடம் ஒரு சவரன் தங்க செயின் ஒப்படைக்கப்பட்டது.
சாலையில் கிடந்த செயினை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருதயமேரியை போலீசார் பாராட்டினர். செயினை தொலைத்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.