போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு
மணலி, திருவொற்றியூர், சக்தி கணபதி நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 44. இவர், மணலி போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றினார்.
நேற்று மதியம் மணலி சந்தை சந்திப்பில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணியில் இருந்த அவருக்கு, மாலை 5:50 மணிக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பின், மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஜெயகிருஷ்ணன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்த மணலி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.