ஜோசப் கல்லுாரியில் ‘ தேசிய ஸ்டார்ட் அப்’ தினம்
சென்னை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் ‘தேசிய ஸ்டார்ட் அப்’ தினம் சிறப்பிக்கப்பட்டது.
இந்திய தொழில்நுட்ப கல்வி அமைச்சகம், எம்.ஐ.சி., இணைந்து, ‘தேசிய ஸ்டார்ட் அப்’ தின விழா, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடத்தியது.
இந்திய மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள், அவர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கமாக இந்த விழா சிறப்பிக்கப்பட்டது. ஜோசப் பொறியியல் கல்லுாரி முதல்வர் வட்டி சேஷகிரி ராவ், இளைஞர்களிடையே தொழில் முனைவோர் உணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
எம்.ஐ.சி., இன்னோவேஷன் கமிட்டி துணை தலைவர் பாலா, மேலாளர் ஆனந்தசிவராஜ், தேசிய துவக்க விழா ஒருங்கிணைப்பாளர் நிதின்குமார் ஆகியோர், இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என பேசினர்.
இந்நிகழ்ச்சி வாயிலாக, தொழில்முனைவோராகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.