விபத்தில் சிறுவன் பலி
புளியந்தோப்பு, பட்டாளம், போகிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சதீஷ், 16. இவர், நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி, ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திடீரென நிலை தடுமாறி சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
அப்போது, பின்னால் வந்த ‘டாடா இன்ட்ரா’ லோடு வேன், சதீஷ் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயமடைந்த சதீஷ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய புளியந்தோப்பைச் சேர்ந்த சபீர், 43, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.