மாநில செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
சென்னை,அம்பத்துாரில் பிப்., 2ல் நடக்க உள்ள, மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க, சிறுவர் – சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் செஸ் அகடாமி ஆதரவில், ‘ஏ – மேக்ஸ்’ அகாடமி சார்பில், ஆறாவது மாநில அளவிலான செஸ் போட்டி, அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியில், வரும் பிப்., 2ல் நடக்கிறது.
போட்டியில், 8, 10, 12, 15 மற்றும் 25 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக நடக்கின்றன. போட்டிகள், ‘பிடே’ விதிப்படி, சுவிஸ் அடிப்படையில், ஏழு சுற்றுகளாக நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 15 இடங்களை பிடிப்போருக்கு, கோப்பைகளும், பதக்கமும் வழங்கப்பட உள்ளன. தவிர, யங்கஸ்ட் பாய்ஸ், யங்கஸ்ட் கேள்ஸ், சிறந்தஅகாடமி மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து சிறுவர்- சிறுமியர் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், இம்மாதம், 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, 93605 53703, 90252 45635 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.