6 சிறுமியரின் ஆபா ச வீடியோவை விற்றது அம்பலம் : மகளின் தோழிகளையும் விட்டு வைக்காத கொடுமை
சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதி, தங்களின், 16 வயது மகளையும், அவரின் தோழிகள் ஆறு பேரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன், இரு வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது’ என, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி விசாரித்தனர். சிறுமியுடன் நெருக்கமாக இருந்த, பட்டினப்பாக்கம் மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
௪ பேருக்கு ‘போக்சோ’
அப்போது, சிறுமியின் பெற்றோரே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதை பதிவிறக்கம் செய்ய, 3,000 ரூபாய் வரை வசூலித்தது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, நான்கு பேரும், ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிறுமியின் பெற்றோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தனித்தனியாக ஆறு சிறுமியருடன் வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், போலீசாரிடம் சிக்கிய சிறுமியின் பெற்றோர், அச்சிறுமியின் தோழியர் ஆறு பேரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையத்தில் பதிவேற்றம் செய்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சீரழித்த பெற்றோர்
இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன், இணையதளத்தில் இருந்து, சிறுமியரின் ஆபாச வீடியோக்களை அகற்றும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த வகையிலும், சிறுமியரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது மற்றும் அதை மற்றவர்களுக்கு பகிர்வது சட்டப்படி குற்றம். இதனால், இந்த வழக்கில்
சம்மந்தப்பட்ட சிறுமியரின் ஆபாச வீடியோக்கை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்கள் யார், யார்; யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெற்ற மகளையும், அவரின் தோழிகளின் வாழ்வை சீரழித்த பெற்றோரின் பின்னணியில், பாலியல் தொழில் முக்கிய புள்ளிகள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இக்குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும், அரசின் சமீபத்திய சட்டத்தின்கீழ் துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவர் என, போலீசார் தெரிவித்தனர்.