வீட்டை உடைத்து நகை , பணம் கொள்ளை

பெரம்பூர், பெரம்பூர், பழனியாண்டவர் தெருவை சேர்ந்தவர் வேதவள்ளி, 42. கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, மகளுடன் வசித்து வருகிறார்.

வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வரும் இவர், கடந்த 15ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு, மகளுடன் வெளியே சென்றுள்ளார்.

மீண்டும் மாலை 4:00 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த எட்டு சவரன் நகை மற்றும் 12,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *