மாயமான 14 வயது சிறுமி ஒரே நாளில் மீட்ட போலீஸ்
திருவொற்றியூர்,:மாயமான, 14 வயது சிறுமியை, திருவொற்றியூர் போலீசார் ஒரே நாளில் மீட்டனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். தாயார் திட்டியதால், 10ம் தேதி, திடீரென மாயமானார்.
திருவொற்றியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவுப்படி, மாயமான சிறுமியை மீட்க, உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில், ஆய்வாளர் ரஜினிஸ், உதவி ஆய்வாளர் நவீன் குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சிறுமி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து பேருந்தில் தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். பஸ்சில் செல்லும்போது, உடன் படிக்கும் தோழிக்கு போன் பேசியுள்ளார். இதையறிந்த, தனிப்படை போலீசார், சிறுமி பேசிய மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்தபோது, மருத்துவ மாணவி ஒருவரின் மொபைல் போன் என்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த மருத்துவ மாணவியிடன், திருவொற்றியூர் சிறுமி மாயமான சம்பவம் குறித்து விளக்கி, அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், பேருந்து மதுரை வரும்போது இறக்கிவிடும்படியும் கூறியுள்ளனர். இதுகுறித்து, பேருந்து ஓட்டுனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை காவல் துணை கமிஷனர், மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் பேசி, சிறுமியை பத்திரமாக மீட்டு, திருப்பி அனுப்பும்படி கேட்டு கொண்டார்.
மதுரை, ஒத்தகடையில் தயாராக இருந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, பஸ்சில் வந்த சிறுமியை மீட்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை மீட்கும் முயற்சியில், 15 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டு, ஒரே நாளில் மீட்டுள்ளன