மங்களூரு, ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை, பொங்கல் பண்டிகையொட்டி, எழும்பூர் – மங்களூரு, ராமநாதபுரம் – தாம்பரம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே, நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை எழும்பூரில் இருந்து, நாளை மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:50 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூரு செல்லும்.

வழித்தடம்: பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை.

ராமநாதபுரத்தில் இருந்து வரும் 19ம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வரும். வழித்தடம்: மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, சிதம்பரம், கடலுார் போர்ட், விழுப்புரம் வழியாக வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *