மாணவனை தாக்கிய ரவுடி கும்பல்
சைதாப்பேட்டை, ஜசைதாப்பேட்டை, கோதாமேடு பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், கிண்டி, மடுவாங்கரையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார்.
இவர், ரீல்ஸ் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடியைச் சேர்ந்த சரித்திர பதிவு குற்றவாளிகள், ஒரு கும்பல் ரீல்ஸ் போட்டனர்.
மாணவருக்கும், இந்த கும்பலுக்கும் இடையே, யார் பெரிய அளவில் ரீல்ஸ் போடுவது என, போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று, சைதாப்பேட்டையில் உள்ள ஒரு டியூஷன் சென்டருக்கு, மாணவன் படிக்க சென்றார். அங்கு, அந்த கும்பல் நுழைந்து, மாணவனை சாலையில் இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியது.
பலத்த காயமடைந்த மாணவன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சைதாப்பேட்டை போலீசார், தப்பி ஓடிய கும்பலை தேடுகின்றனர்.