ஜி.எ ச்.,சில் போன் பறித்தவர் கைது
சென்னைராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாட்ராக், 33. இவரது தந்தை சாமுவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, ஷாட்ராக் உடனிருந்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஷாட்ராக் மருத்துவமனையின் வராண்டாவில் துாங்கி கொண்டிருந்தபோது, இடுப்பில் இருந்த ஆப்பிள் ஐ -போனை மர்ம நபர் திருடி தப்பி ஓடினார். சுதாரித்து எழுந்த ஷாட்ராக், அவரை விரட்டி சென்று போலீசார் உதவியுடன் பிடித்து, மருத்துவமனை வளாக போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆல்பர்ட் விஜய், 35, என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததும், மொபைல் போன் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்