ஜி.பி. , சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, அண்ணாசாலை – ஜி.பி., சாலை சந்திப்பில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, காவல் துறையினர் சில மாற்றங்களை இன்று முதல் அமல்படுத்துகின்றனர்.
ஜி.பி., சாலையில் இருந்து அண்ணாசாலை வழியாக பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும், இடது புறம் திரும்ப வேண்டும். பின், எல்.ஐ.சி., அருகே கொடுக்கப்பட்டுள்ள, ‘யு’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்
அண்ணா சாலையில் இருந்து ஜி.பி.,சாலை வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்
அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக ஜி.பி., சாலை செல்லும் வாகனங்கள், தர்கா எதிரே, ‘யு’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.
இதன் வாயிலாக அண்ணாசாலையில் போக்குவரத்து குறைந்து, வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது.