அப்போலோ மருத்துவமனை சிறுநீரக புற்றுகட்டிக்கு ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை அசத்தல்
வேளச்சேரி: தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில், சிறுநீரகத்தின் முக்கியமான இரத்த நாளங்களுக்கு அருகில் இருந்த 5 செமீ நீளமுள்ள புற்றுகட்டியை சிறுநீரகத்தை அகற்றாமல் நவீன ரோபோ சாதனத்தின் உதவியை பயன்படுத்தி புற்றுகட்டியை மட்டும் அகற்றி சாதனை செய்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் – புற்றுநோயியல் துறை மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் முதுநிலை நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் சிறப்பு நிபுணர்கள் மாதவ் திவாரி, டாக்டர் என்.ராகவன் ஆகியோர் கூறியதாவது
சிறுநீரகத்தில் புற்றுகட்டி வந்த நிலையில் பங்களாதேசை சேர்ந்த 40 வயது நோயாளி, எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். இவர் பல மருத்துவமனைக்கு சென்றபோது அனைத்து மருத்துவமனைகளிலும் சிறுநீரகத்தை அகற்றி சிகிச்சை அளிப்பதாக கூறி உள்ளனர். இதனால் பல சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் சிகிக்சை எடுக்காமல் எங்கள் மருத்துவமணக்கு வந்தார். எங்கள் மருத்துவமனை குழுவினர் நோயாளியின் முழு சிறுநீரகத்தையும் அகற்றாமல் ரோபோ உதவியுடன் புற்றுகட்டி உள்ள பகுதியை மட்டும் அகற்றி மற்ற பகுதியை பாதுகாப்பாக தக்கவைத்து அறுவைசிகிச்சை அளிப்பது என முடிவு செய்தோம்.
மேலும் அடி வயிற்றுபகுதி வழியே அறுவை சிகிச்சை செய்தால் ஏற்படும் கஷ்டங்களை தவிர்க்கும் வகையில் வயிற்றறை உரைக்கு பின்புறத்திலிருந்து அணுகும் ரோபோட்டிக் உத்தியின் வழியாக முதுகுபுறத்தில் இருந்து சிறுநீரகத்தை எங்களால் நேரடியாக அனுகி புற்றுகட்டி உள்ள சிறுநீரக பகுதி மட்டும் அறுவை சிகிச்சை செய்து மற்ற சிறுநீரக பகுதியை உடலில் அப்படியே இருக்கும் வகையில் சிகிச்சை அளிக்கபட்டது. இந்த சிகிச்சை முறையினால் சிறுநீரகம் அகற்றபடாமல் தக்கவைத்துள்ளது.
இதனால் நோயாளி 2 சிறுநீரகத்தோடு வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 48 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மேலும் ஒரே வாரத்தில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார். மருத்துவமனையின் புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் துறையின் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி பேசுகையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் முதன்மை மருத்துவ மணையாக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். நிகழ்ச்சியில் மருத்துவர் ஸ்ரீவத்ஷன் மற்றும் மருத்துவகுழுவினர், குணமடைந்த நோயாளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.