பெண் கைதி திடீர் மரணம்

தண்டையார்பேட்டை: ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ராணி (66) என்பவர், கடந்த டிசம்பர் 10ம் தேதி ஆவடியில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 7ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் 3வது தளத்தில் அனுமதிக்கப்பட்டு, இதய சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று திடீரென சுவாச கோளாறு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்தார். இதுகுறித்து ராணியின் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் ஸ்டான்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *