சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை -எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி, ரூ 4,800 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என ஈபிஎஸ்சுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும் சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.