ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்
சென்னை:அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தில் தகுதி வாய்ந்த ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தொழில்நுட்பம், துணை செவிலியர், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், இணையதளத்தில் பதிவு செய்தவர்கள், இந்த முகாமில் பங்கு பெறலாம். காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு ஸ்டேடியத்தில், பிப்., 5 முதல் 15 வரை முகாம் நடக்கிறது. முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும். கூடுதல் விபரங்களை, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.