கும்டா உதவி செயலராக ஆர்.டி.ஓ. , நியமனம்

சென்னை:சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் உதவிச் செயலராக, வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, தமிழக உள்துறைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்ட உத்தரவு:

சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அலுவலரும், தாம்பரம் ஆர்.டி.ஓ., பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தவருமான யுவராஜ், கும்டா எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் உதவி செயலராக நியமிக்கப்படுகிறார்.

இதன் தொடர்ச்சியாக, சோழிங்கநல்லுார் மோட்டார் வாகன ஆய்வாளர் அருணாச்சலம், வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பையும், தாம்பரம் ஆர்.டி.ஓ., உதவி அலுவலர் குமரகுரு, வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக் கொள்வர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *