தேசிய ‘ ஸ்ட்ரென்த் லிப்ட்’ சாம்பியன்ஷிப் போட்டி
சென்னை, தேசிய அளவிலான ‘ஸ்ட்ரென்த் லிப்ட்’ சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ராஜா, அமுத சுகந்திக்கு சிறப்பு பட்டங்கள் வழங்கப்பட்டன.
ஹரியானா ஸ்ட்ரென்த் லிப்ட் சங்கம் சார்பில், உடல் வலிமையை நிரூபிக்கும் 34வது தேசிய ‘ஸ்ட்ரென்த் லிப்ட்’ சாம்பியன்ஷிப் போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் கடந்த 1ல் துவங்கி 5ம் தேதி நிறைவடைந்தது.
போட்டியில், சப் – ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
இதில், தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்ட் சங்கம் சார்பில், 32 வீரர் – வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். அனைத்து போட்டிகளின் முடிவில், தமிழக வீரர் – வீராங்கனையர் 13 தங்கம், ஏழு வெள்ளி, 12 வெண்கலம் என, மொத்தம் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
அதில், சென்னையைச் சேர்ந்த ராஜா மாஸ்டர்ஸ் பிரிவில், மூன்றாவது முறையாக, ‘ஸ்ட்ராங் மேன்’ பட்டம் வென்றார். அதேபோல், சென்னையைச் சேர்ந்த அமுத சுகந்தி ஆறாவது முறையாக ‘ஸ்ட்ராங் விமன்’ பட்டத்தை வென்று அசத்தினார்.