டாக்டர், செவிலியர்கள் பற்றாக்குறையால் இரவில் மூடப்படும் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைக்கு பெரும்பாக்கத்தில் அவதி

சென்னை பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேர மருத்துவமனையாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர்.

காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சிகிச்சை முதல், கர்ப்பிணியருக்கான மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சை வரை அளிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக, ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். காலை முதல் மாலை வரை அவர் ஒருவரே சிகிச்சை அளிப்பார். அதன்பின், செவிலியர்கள் பாதிப்பு கேட்டு மாத்திரை வழங்கினர்.

இந்நிலையில், ஒரு மாதமாக டாக்டர் நியமிக்கப்படவில்லை. இதனால், மாலை முதல் மறுநாள் காலை வரை மருத்துவமனை மூடப்படுகிறது. இங்கு ஏழை மக்கள் அதிகம் வசிப்பதால், இந்த மருத்துவமனையை நம்பித்தான் உள்ளனர்

இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு இந்த மருத்துவ மனையை நாடினோம். ஆனால், ஒரு மாதமாக பூட்டி வைத்துள்ளனர்.

பகலில், மேடவாக்கம் மருத்துவமனையில் இருந்து வரும் டாக்டர், சில மணி நேரம் அமர்ந்திருப்பார். அதுவும், வாரத்திற்கு ஒரு சில நாட்கள் தான். அதன்பின், பாதிப்பை கேட்டு, செவிலியர்கள் தான் மாத்திரை தருகின்றனர். ரத்த பரிசோதனையும் செய்வதில்லை.

எனவே, இந்த சுகாதார நிலையத்தை, 24 மணி நேரம் திறந்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

‘பெண் ஊழியர்களுக்கு

இரவில் பாதுகாப்பில்லை’மருத்துவமனை இரவில் மூடப்பட்டது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:டாக்டர், நர்ஸ், ஊழியர்கள் பற்றாக்குறை, இரவில் பணி புரிவதில் அச்சம் போன்ற காரணங்களால், மருத்துவமனையை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது.இரவில் பெண் ஊழியர்களை நியமிப்பதால், அவர்கள் பணி புரிய அச்சப்படுகின்றனர். தகராறு செய்யும் நபர்கள் மீது புகார் அளித்தால், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்குவதில்லை.மருத்துவமனை பாதுகாப்பிற்காக, ஏற்கனவே நியமித்த போலீசாரையும் திரும்ப பெற்றுக் கொண்டனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *