2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சீமானுக்கு 1% வாக்கு மட்டுமே கிடைக்கும்: சுப வீரபாண்டியன் பேச்சு

ஆலந்தூர்: பெரியாரை இழிவுபடுத்தும் சீமானை கண்டித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில், பொதுக்கூட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் பங்கேற்று பேசியதாவது:
சீமான் யாரா சிலரால் இயக்கப்படுகிறார். பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு பிரபாகரனையும் காட்டிக் கொடுப்பார். விஜய் வந்த பிறகு தனது வாக்கு சதவீதம் குறைகிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவருக்கு 1% வாக்குகள் மட்டுமே கிடைக்கும். தன்னைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும், மலிவான விளம்பரத்தின் மூலம் தன்னை பற்றி பேச வேண்டும் என கருதுவது அவரது நோக்கம். நாம் தமிழர் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ ஒரு மலர் வெளியிடுகிறார்கள்.

அதில் அஞ்சல் அட்டை வடிவில் 64 படங்கள் இடம்பெற்றன அதில் முதல் படம் பெரியார். 64 படங்களில் பாரதி படம் இல்லை. பாரதியார், தமிழ்நாட்டில் தமிழ் சிறக்கட்டும். பாரதம் முழுவதும் சமஸ்கிரு ஆட்சி நிலவட்டும் என்று எழுதி இருக்கிறார். அவர் எப்படி தமிழ் தேசிய கவிஞர் ஆவார். சீமான், பெரியாரை, கலைஞரை, பிரபாகரனை என பலரையும் இழிவுபடுத்தி உள்ளார். அதற்கான சான்றுகளை தருகிறேன். கடந்த 26 ஆண்டுகளாக ஈழத்திற்கு நீங்க செய்த உதவிகள் என்ன. 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தமான போது எதிர்த்து தமிழகம் முழுதும் கூட்டம் நடத்தியவர் கலைஞர். இல்லை என்று சொல்ல முடியுமா. உங்கள் பொய் பிரசாரங்களை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *