தெற்காசியாவில் முன் மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க முயிற்சி

சட்டப் பேரவையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைபடிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16வது நிதிக்குழு தமிழ்நாடு வந்தபோது நமது கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீமாக அதிகரித்தல், நிதிப் பகிர்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையை பின்பற்றுதல், மாநிலங்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப் பகிர்வு அளித்தல் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அறிக்கை குறித்து ஆணையம் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 9681 கோயில்களில் ரூ.5486 கோடி செலவில் 21908 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில்கள் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.1770 கோடி செலவில் 19 கோயில் வளாங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் தற்போது பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ரங்கம், மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இயங்கிவரும் அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகளில் இதுவரை 286 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான நிரந்தரச் சான்றுகளை இணைய வழியில் எளிமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டு தலங்களை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை கொண்டு திருநெல்வேலியில் உலகத் தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர சோழனின் கடல் கடந் வெற்றிப் பயணம், அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூரும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலைையையும் இணைக்கும் வகையில் நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டின் பிற மாநிலங்கள் மட்டும் அல்லாமல் தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாகவும், தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *