பெசன்ட் நகரில் பாதுகாப்பு கூடம் தயார் படம் முட்டையிட படையெடுக்கும் ஆமைகள்

சென்னை:கடல் ஆமைகள், ஜனவரி முதல் மார்ச் வரை, கரையில் வந்து மணலில் குழி தோண்டி, முட்டையிட்டு மூடி வைத்து செல்லும். ஒரு ஆமை, 140 முதல் 170 வரை முட்டைகள் இடும்.

இந்த முட்டைகளை, நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறையினர் முட்டை பொரிப்பகம் அமைப்பர்.

இதற்காக, பெசன்ட் நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் பழவேற்காடு ஆகிய கடற்கரைகளில், ஆமை முட்டைகள் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையில் ஆமைகள் வந்து முட்டையிடும் இடமாக பெசன்ட் நகர் உள்ளது. கடந்த 2020 முதல், ஒவ்வொரு ஆண்டும், 100 முதல் 140 ஆமைகள் வந்து, 6,000 முதல் 12,000 வரை முட்டைகள் இட்டு சென்றுள்ளன.

இந்த ஆண்டும், ஓரிரு நாட்களில், அதிக எண்ணிக்கையில் ஆமைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *