காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு
காசிமேடு:காசிமேடு துறைமுகத்தில், மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் குவிவர். ஆனால், கடந்த சில வாரங்களாக, மீன்கள் வரத்து குறைவால், மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்து வந்தனர்
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே காசிமேடு மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மீன்பிடிக்க சென்ற 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில், இந்த வாரம் பாறை, இறால் உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகளவில் இருந்தது. விலை சற்று உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 900 – 1,000
வெள்ளை வவ்வால் 1,000
கறுப்பு வவ்வால் 800 – 900
சின்ன பாறை 150 – 200
பெரிய பாறை 400 – 500
சங்கரா 350 – 400
சீலா 400 – 500
நெத்திலி 200 – 300
வாளை 150 – 200
கனாங்கத்த 100 – 150
நண்டு 150 – 200
இறால் 250 – 300
பிளவர் இறால் 700 – 800