கருப்பு துப்பட்டா: போலீஸ் விளக்கம்

சென்னை: சென்னை, எழும்பூரில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கருப்பு துப்பட்டா அணிந்து வந்த மாணவியரிடம் இருந்து, அவற்றை வாங்கி வைத்தது சர்ச்சையான நிலையில்,

இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர போலீசார் வெளியிட்ட அறிக்கை: சென்னை, எழும்பூரில் நடந்த அரசு விழாவில், சென்னை பெருநகர காவல் பாதுகாப்பு பிரிவு போலீசார், அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை சோதனை செய்து அனுப்பினர். அப்போது, கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவியரிடம் அதை வாங்கி வைத்-தனர். அங்கு பணியில் இருந்த போலீசார், தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இது நிகழ்ந்தது என தெரிய வருகிறது. இனி, அதுபோன்று நிகழாமல் இருப்பதற்கு, எஸ்.சி.பி., எனப்படும் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *