வைரஸ் காய்ச்சலால் குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனை முற்றுகை
பெரம்பூர்: கொடுங்கையூர் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் சாந்தம். இவர மகள் டெனிஷாவுக்கு (3), கடந்த 3ம் தேதி மாலை காய்ச்சல் அதிகமாக இருந்ததால், கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சேர்த்துள்ளனர். அங்கு, குழந்தைக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
அதற்காக சிகிச்சை அளித்துள்னர். இந்நிலையில், நேற்று காலை குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தை சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.