குறை கேட்க வந்த கவுன்சிலர் , அதிகாரிகள் மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி
சென்னை, சென்னையில் வார்டு வாரியாக பகுதி மக்களின் குறைகளை சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக சென்று கேட்டு வருகின்றன
அந்த வகையில் மூன்றாம் நாளான நேற்று, திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 77வது வார்டு காங்., கவுன்சிலர் சுமதி புத்தநேசன் மற்றும் அதிகாரிகள், சூளை தட்டான்குளம், காட்டூர் நல்லமுத்து ஆச்சாரி தெரு சுற்றுவட்டாரத்தில் நேற்று காலை மக்களை சந்தித்து குறைகளை கேட்க சென்றனர். உடன் தி.மு.க., நிர்வாகிகளும் சென்றுள்ளனர்.
ஆனால் பகுதி மக்கள் ஒன்று கூடி கவுன்சிலர்களையும் அதிகாரிகளையும் சரமாரியாக கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினர்.
‘நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது தான் இந்த பகுதி கண்ணுக்கு தெரிகிறதா… குடிநீர் லைன் கேட்டால், சாலை இப்போது தான் போட்டோம், வெட்ட முடியாது என்றீர்கள். புது மின்மீட்டர் போடவில்லை.
தேர்தல் வருகிறது என்பதால் இப்போது வருகிறீர்களா?’ என சரமாரியாக கேள்வி கேட்டனர். வேறு வழியில்லாமல் கவுன்சிலரும் அதிகாரிகளும் திரும்பி சென்றனர்.