ரூ.1 கோடி நிலம் மோசடி செய்து விற்றவர் கைது=
ஆவடி, மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நிர்மலா வல்லத், 72. இவரது கணவர் முரளி, 2018ல் இறந்துவிட்டார். அவரது பெயரில் கொரட்டூர், டி.வி.எஸ்., நகரில் 2,112 சதுர அடி இடம் உள்ளது.
இந்த இடத்தை சதீஷ் என்பவர், 2023ல் முரளியிடம் கிரையம் பெற்றதாகவும், அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்றதாகவும் தெரிகிறது.
புகாரின்படி இதற்கு போலியான ஆவணங்களை தயாரித்த ஹரிகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சதீஷ், இடத்தை வாங்கிய நபர் குறித்தும், போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.