மொட்டை போட வீட்டிற்கு அழைத்து சலுான் கடைக்காரரிடம் பணம் பறிப்பு
கொடுங்கையூர், சென்னை, கொடுங்கையூர், ஜம்புலி தெருவை சேர்ந்தவர் ராம்பால், 42. இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக, வெங்கடேஸ்வரா காலனியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2024 டிச., 31ம் தேதி, முனுசாமி என்பவர், தன் தந்தைக்கு மொட்டை போட வேண்டுமெனவும், கொடுங்கையூர், ஜம்புலி தெருவில் உள்ள தன் வீட்டிற்கு வர வேண்டும் எனவும் ராம்பாலிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி, அவரது வீட்டிற்கு ராம்பால் சென்றுள்ளார். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, ஜிபே வாயிலாக, 20,000 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு, முனுசாமிதப்பினார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, கோபால் தெருவை சேர்ந்த, கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி முனுசாமியை, 36, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.