புத்தக விமர்சனம் ‘நலம் காக்கும் தமிழர் வழிபாடு’
நலம் காக்கும் தமிழர் வழிபாடு
ஆசிரியர்: மரு.தெ. வேலாயுதம்
பக்கம்: 136, விலை: ரூ.180
வெளியீடு: தமிழ் மருத்துவக் கழகம்
சடங்குகள், சாங்கியங்கள், கோவில் வழிபாடுகள், பொங்கிப் பெருகும் பொங்கல், குங்குமம் வைப்பதின் நன்மைகள், ஆரத்தி எடுப்பது ஏன், வளைகாப்பு, விரதங்களும் சமயங்களும் மற்றும் திருஷ்டி கட்டுதல் போன்ற பல கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஒன்பதாவது வள்ளல்விஜயகாந்தின் வரலாறு!
ஆசிரியர்: பாஸ்கர்ராஜ்
பக்கம்: 328, விலை: ரூ.350
வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்
விஜயகாந்த், நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு திறமைகளை கொண்டிருந்தார். என்றாலும், அவர் இறப்பின் போதும், எப்போதும் பேசப்பட்டது அவரின் கொடைத்தன்மை. அதைப்பற்றியும், அவருடன் பழகியோரின் கருத்துகளும் அடங்கியது.
அடிமைத்தனத்தை நீக்கி ஆர்த்தெழுங்கள்!
ஆசிரியர்: செ.சண்முகம்
பக்கம்: 204 விலை: ரூ.250
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
பேச்சு, எழுத்து பற்றி விரிவாக அலசும் நுால். இதில், மொழி எந்தெந்த வகைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் பிரதமர் மோடி, பிரிட்டிஷ், காங்கிரஸ் ஆட்சிகளின் சுரண்டல்களைக் கூறி, எதிர்கால பணிகள் பற்றி பேசுவதையும் டிரம்பின் பேச்சையும் ஒப்பிடுகிறது. இப்படி நிறைய…