10 சவரன் ரூ.ஒரு லட்சம் திருட்டு
தாம்பரம்,மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி, சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் ககார்நீஸ்வரன்; மஸ்கட்டில், மருந்து விற்பனையாளராக பணிபுரிகிறார். இவரது மகள் நிவேதிதா, 22, மட்டும் வீட்டில் தனியாக வசிக்கிறார்.
ஜன., 1ம் தேதி, வீட்டை பூட்டி, மாடம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். நேற்று வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 1 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அணைத்துவிட்டு, மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.