துறைமுகத்தில் குப்பை அகற்றம்
காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, காசிமேடு துறைமுக கடல் பகுதியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற, மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, காசிமேடு துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் மீன்வளத் துறை மேற்பார்வையில், மாநகராட்சி ஊழியர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கடலில் குவிக்கப்பட்டிருந்த மரக்கழிவு, குப்பை, பிளாஸ்டிக் கழிவு, தெர்மாகோல் உள்ளிட்டவற்றை, டன் கணக்கில் அகற்றி சுத்தம் செய்தனர்.