சென்னை மலர் கண்காட்சி முதல்நாள் வசூல் ரூ.3 லட்சம்
சென்னை, சென்னை மலர் கண்காட்சி துவங்கிய முதல் நாளில், பார்வையாளர் கட்டணமாக, 3 லட்சம் ரூபாய் வசூலாகி உள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில், நான்காம் ஆண்டு சென்னை மலர் கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட பூச்செடிகளை வைத்து, பல்வேறு பொம்மை உருவங்கள், வாகன வடிவங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
நாள்தோறும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையாளர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெரியவர்களுக்கு 200 ரூபாய், சிறியவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
முதல்நாளில் 1,600 பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன் வாயிலாக, தோட்டக்கலைத்துறைக்கு, 3 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. வரும் நாட்களில் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.