மலை போல் குவிந்துள்ள குப்பையால் தீயணைப்பு நிலையம் திறப்பில் தாமதம்

பூந்தமல்லி,பூந்தமல்லி குமணன்சாவடியில், தகர சீட்டுகள் போடப்பட்ட சிறிய கட்டடத்தில், இட நெருக்கடியில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது

இதையடுத்து, இட வசதியுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரசு கருவூல அலுவலகம் அருகே, 1.19 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் அருகே, சென்னீர்குப்பம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, மலைபோல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதால், புதிய கட்டடம் திறப்பது தாமதமாகியுள்ளது

குப்பை கொட்டுவதை நிறுத்தவும், தற்போதுள்ள குப்பையை அகற்றவும், சென்னீர்குப்பம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அறிவுறுத்தியும் குப்பை அகற்றப்படவில்லை.

இதனால், புதிய கட்டடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. அதனால், இங்குள்ள இரும்பு கேட்டுகள், மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

எனவே, குப்பையை அகற்றி தீயணைப்பு நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *