போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது
அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திலீப், 50;காவலாளி. இவரது மனைவி பார்வதி, 45; வீட்டு வேலை செய்கிறார்.
திலீப், குடிபோதையில்மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவருக்கு, இரண்டாவதுமனைவி இருப்பது தொடர்பாகவும் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, குடிபோதையில் இருந்த திலீப், மனைவியிடம் தகராறு செய்து, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால், பார்வதியின் வயிற்றை லேசாக கிழித்துள்ளார்.
காயமடைந்த பார்வதிபுகாரையடுத்து அரும்பாக்கம் போலீசார், திலீப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.