அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1வது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதில் 2வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 600 மெகாவாட், 1வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் என மொத்தமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.