மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மாநகராட்சி நிதி ரூ.24 லட்சம், இந்தியன் ஆயில் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதி ரூ.25 லட்சம் என ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
கலாநிதி வீராசாமி எம்பி பங்கேற்று, தடுப்பூசி மருந்து பாதுகாப்பு பெட்டகம், ஐஸ் பாக்ஸ், ஸ்கேன் மெஷின், நவீன ரத்த பரிசோதனை மற்றும் ரத்தம் உறைய வைக்கும் நவீன இயந்திரம் போன்ற பல்வேறு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர் புருஷோத்தமன், செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், திமுக மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், நிர்வாகிகள் சாரதி பாலாஜி, பிரபாவதி, கார்த்திகேயன், எம்.எம்.செந்தில், கலைவாணன், தமிழ்ச்செல்வன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.