சர்குலர் ரயில் இயக்காததால் பயணியர் அவதி

சென்னை புறநகரில் காஞ்சிபுரம், அரக்கோணத்துக்கு பயணியர் ஒரே மின்சார ரயிலில் பயணிக்க வசதியாக, சர்குலர் ரயில் சேவை இயக்கப்பட்டது.

சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வழியாக, மீண்டும் சென்னை கடற்கரைக்கு வந்தைடையும்.

இந்த தடத்தில், இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் சேவை, நேரடியாக செல்லும் பயணியருக்கு மிகவும் வசதியாக இருந்தது.

கொரோனா பாதிப்பின்போது, இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளை கடந்தும், இந்த ரயில் சேவை மீண்டும் துவங்கப்படவில்லை.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

சர்குலர் ரயில் சேவை மீண்டும் துவங்கப்படாததால் பயணியர் அவதிப்படுகின்றனர். அதேபோல், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில், நள்ளிரவு 12:15 மணி ரயில் சேவையை, மீண்டும் துவங்கப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *