மாரத்தான் பங்கேற்க வரும் 10ம் தேதி அரசு அழைப்பு
சென்னை,சட்டசபையில் அரசு அறிவித்தபடி, 2024 – 25ம் ஆண்டிற்கான, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரிலான மாரத்தான் போட்டி, வரும் 10ம் தேதி காலை 5:30 மணிக்கு நடக்கிறது.
சுவாமி சிவானந்தா சாலையில் துவங்கி, நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே மில்லத் பாலம் இடதுபுறமாக, அண்ணா சாலை வழியாக, சுவாமி சிவானந்தா சாலையில் நிறைவடைகிறது.
இதில், 17 – 25 வயதுக்கு உட்பட ஆண்களுக்கு, 5, 8 கி.மீ., போட்டிகளும், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 10, 5 கி.மீ., போட்டிகளும் நடக்கின்றன.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடங்களை பிடிப்போருக்கு, 5,000 ரூபாயும், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திற்கு, முறையே, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல், நான்கு முதல் 10 இடங்களை பிடிப்போருக்கு, தலா 1,000 ரூபாயும் சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 7ம் தேதிக்குள், நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யலாம்.
விபரங்களுக்கு, 74017 03480 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.