புதுமாப்பிள்ளை ‘எஸ்கேப் ‘ காதல் மனைவி புகார்
செய்யூர் அடுத்த பாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகன் தினேஷ், 22. அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது மகள் ஜோதிகா, 24, என்பவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து, கடந்த 24ம் தேதி, திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், செய்யூர் பகுதியிலுள்ள நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற தினேஷ், குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.
திருமணம் செய்து ஏமாற்றி தலைமறைவான கணவரை கண்டுபிடித்து, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு, மேல்மருவத்துார் மகளிர் போலீசில், ஜோதிகா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.