பைக் திருடிய வாலிபர் கைது
கே.கே., நகர், கே.கே., நகர் சிவலிங்கபுரம், 87வது தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 28. இவர், கடந்த மாதம், 26ம் தேதி இரவு, தனது வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலையில் பார்த்த போது, பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே., நகர் போலீசார் விசாரித்தனர்
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, பைக்கை திருடிய திருவண்ணாமாலை மாவட்டம், கூடலுாரைச் சேர்ந்த ஆல்பர்ட் ரோசாரியா, 19, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 18ம் தேதி விருகம்பாக்கம் பகுதியில், இன்னொரு பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த இரு பைக்குளையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.