ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆலந்தூர்: ராமாபுரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அமுதா (34). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தூய்மை பணி செய்து வந்தார். நேற்று, வேலை முடிந்ததும், கிண்டி ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து, செல்போனில் தனது மகன் ரித்தீஷை தொடர்புகொண்டு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு, கன்னியாகுமரி நோக்கி சென்ற திருக்குறள் அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், கடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்