எம் .ஆர்.எப்., தொழிற்சாலை பேருந்துகளால் அச்சம்
திருவொற்றியூர்:திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், மீண்டும் கொண்டு சென்று விடவும், இந்நிறுவனத்தில் பேருந்து வசதி உண்டு.
இந்நிலையில், மதிய ஷிப்ட் முடிந்து, நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் வெளியேறுகின்றனர். அப்போது, ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும், அடுத்தடுத்து, சாலையில் வருகின்றன.
ஆனால், பேருந்துகளை முறையாக ஒழுங்குபடுத்துவது கிடையாது. இப்பகுதியை ஒட்டி, மீன், காய்கறி சந்தைகள், பத்திரப்பதிவு அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையம், மின்சார ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என, மக்கள் புழக்கம் அதிகம் உள்ள விம்கோ நகர் சந்திப்பு உள்ளது.