ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் மீது வழக்கு பதிவு

அம்பத்தூர்:கொரட்டூர், வாட்டர் கெனால் சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை 12:05 மணியளவில், போலீஸ் ஏட்டு ரமேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அங்கு, ‘ஹோண்டா ஐ20’ காரில் மது அருந்தி கொண்டிருந்த ஒரு ஆண், இரண்டு இளம் பெண்களை, ஏட்டு ரமேஷ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்களில் ஒருவர், ரமேஷின் கன்னத்தில் அறைந்து, வாயில் குத்தியுள்ளார்.

காயமடைந்த ரமேஷை தகவலறிந்து வந்த போலீஸ்காரர் அரவிந்த், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இது குறித்து விசாரித்த கொரட்டூர் போலீசார், ஏட்டு ரமேஷை தாக்கிய வடபழனியைச் சேர்ந்த ஹேமா, 25, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *