சாலையில் தறிகெட்டு ஓடி மீடியனில் ஏறிய ஜீப்
சென்னை:கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில், நேற்று மாலை மஹிந்திரா பொலிரோ ஜீப் சென்றது.
பொன்னுசாமி ஹோட்டல் அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், மீடியனில் ஏறி விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து வந்த கோட்டூர்புரம் போக்குவரத்து போலீசார், காரை அப்புறப்படுத்தினர்.
விபத்து குறித்து விசாரித்ததில், ஜீப் கே.சி.பி., இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும், இளவரசன் என்பவர் ஜீப்பை ஓட்டியதும், துாக்க கலக்கதால் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.