முதல்வர் போஸ்டரில் செருப்பு வீச்சு: மூதாட்டி மீது எம்.எல்.ஏ., புகார்
சென்னை:சென்னையில், மெட்ரோ துாணில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது, மூதாட்டி ஒருவர் அவரது செருப்பு மற்றும் மண்ணை வாரி வீசும் வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சம்பவம் நடந்தது, விருகம்பாக்கம் பரணி மஹால் அருகே என்பது தெரிய வந்தது.
மேலும் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு செல்லும்போது, மூதாட்டி இத்தகைய செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடம், விருகம்பாக்கம் மற்றும் கே.கே., நகர் காவல் நிலையங்களின் எல்லை பகுதி என்பதால், இரு காவல் நிலையங்களிலும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா புகார் அளித்துள்ளார். மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்தது, விருகம்பாக்கம் பரணி மஹால் அருகே என்பது தெரிய வந்தது.